கொல்கத்தா:
மேற்குவங்கம் மாநிலம் அஸன்சால் ராணிகுஞ்ச் பகுதியில் பாஜக சார்பில் நடந்த ராமநவமி விழாவில் கலவரம் வெடித்தது. வெடிகுண்டுகளை வீசி கடுமையான தாக்குதலில் இரு தரப்பினர் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அஸன்சால்&துர்காபூர் போலீஸ் துணை கமிஷனர் அரி ந்தம் துத்தா சவுத்ரி மீது குண்டு விழுந்து வெடித்தது. இதில் அவரது வலது கை மணிக்கட்டு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மணிக்கட்டு துண்டாகி தொங்கியது.
வலி தாங்க முடியாமல் அந்த ஐபிஎஸ் அதிகாரி அலறினார். உடல் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது இடது கை மணிகட்டுக்கு கீழ் முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பல போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் கையை இழந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி அரித்தம் துத்தா சவுத்ரி விரைந்து குணம் பெற வேண்டும் என ஐபிஎஸ் சங்கம் தெரிவித்துள்ளது. போலீசார் இது போன்ற கடினமான மற்றும் ஆபத்துகள் நிறைந்த சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியது வருத்தமளிக்கிறது என்று அச்சங்க டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.