டில்லி:
‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை அகற்றும் திட்டம் எதுவும் இல்லை’’ என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் எழுத்துப்பூர்மான கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், ‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரினை அகற்றம் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை’’என்றார்.
1954ம் ஆண்டு ஜனாதிபதி உத்தரவின் பேரில் இச்சட்டப்பிரிவு அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு உரிமை மற்றும் சலுகைகள் அளிக்கவும், சட்டமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சட்டத்தின் மூலம் ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அசையா சொத்துக்களை வாங்க முடியாது. அதேபோல் அரசு வேலை மற்றும் அரசு வழங்கும் உதவித் தொகைக¬யும் பெற முடியாது.