மும்பை:

பேஸ்புக் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முகநூல் கணக்கை அழித்த பின்பும் அது ஆக்டிவாக உள்ளது என டுவிட்டரில் நடிகர் பர்ஹான் அக்தர் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் வெற்றி பெற பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு பேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்பு கோரினார்.

அதைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தின்  சார்பில் மன்னிப்பு கோரி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பயனாளிகளின் தகவல்களை பாதுகாப்பது தங்கள் கடமை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்க் கூறியிருந்தார்.

இந்நிலையில், பேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருட்டு தொடர்பாக, அமெரிக்க அரசு விசாரணையை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் பேஸ்புக் தொடர்பாக மத்திய அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில், பிரபல இந்தி நடிகரும், இயக்குனரமான பர்ஹான் அக்தர், பேஸ்புக் நிறுவனம் மீது குற்றம் சாட்டி உள்ளார்.

தனது முகநூல் கணக்கினை நிரந்தரமாக டெலிட் செய்துவிட்ட நிலையில், அது தொடர்ந்து ஆக்டிவாக இருக்கிறது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.