டில்லி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், மோடி தலைமையிலான மத்திய அரசை வீழ்த்தும் விதமாக எதிர்க்கட்சிகள் களமிறங்கி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இன்று விருது அளிக்கிறார்.
சமீபத்தில் கடந்த13ந்தேதி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து பேசி, அவர்களுக்கு விருந்து அளித்த நிலையில், தற்போது சரத்பவாரும் விருந்து வைக்கிறார்.
சமீப காலமாக மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், அதிமுக போன்ற கட்சிகள் செயல்பட்டு வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் டில்லியில் முகாமிட்டு மோடி அரசுக்கு எதிராக திட்டங்களை தீட்டி வருகிறார்.
இதுபோன்ற சூழலில், இன்று எதிர்கட்சிகளுக்கு சரத்பவார் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி உள்பட கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விருந்தின்போது, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி இடையே அடுத்த ஆண்டு வர உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்கள் அமைப்பது குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில், பா.ஜனதாவுக்கு எதிராக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்க வேண்டும் என்று கூறி, தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது