திருவனந்தபுரம்:

பிரபலமான ரேடியோ ஜாக்  மர்ம நபர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கியாக திகழ்ந்தவர் ராஜேஷ்.  மிமிக்ரி மற்றும் நாட்டுப்புற கலையிலும் இவர் சிறந்து விளங்கினார்.

இந்த நிலையில்  நேற்று இரவு 2 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள மெட்ரோ ஸ்டுடியோ ரேடியோ நிலையத்தில் தனது நண்பர் குட்டன் என்பவருடன் பணியில் இருந்தார். அப்போது காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர் ரஜேஷை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அவரது நண்பர் குட்டனும் தாக்கப்பட்டார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள்.