ஞ்சிம்

கோவா முதல்வர் எழுதியதாக வலைத்தளங்களில் வெளியாகி வரும் கடிதம் பொய்யானது எனவும் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவா முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கோவா முதல்வர் மும்பை மருத்துவர்களின் ஆலோசனைப் படி அமெரிக்காவில் சிகிச்சையில் உள்ளார்.   இரு நாட்கள் முன்பு அவருடன் தொலைபேசியில் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் அவர் உடல்நலமுடன் உள்ளதாக அறிக்கை அளித்திருந்தார்.   தற்போது கோவா முதல்வர் எழுதியதாக ஒரு கடிதம் சமுக வலைத் தளங்களில் பரப்பட்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவ் ஜோப் மறைவுக்குப் பின் அவர் எழுதிய கடித்தத்தைப் போல அதே மாதிரியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதம் வைரலாகி வருகிறது.   இதன் மூலம் அவர் மன வருத்தத்தை தெரிவிப்பது போல் இந்தக் கடிதம் உள்ளது.

கோவா முதல்வர் அலுவலகம் இந்தக் கடிதம் பொய்யானது எனவும்  முதல்வர் அலுவலகத்தில் இருந்து நேரடியாக செய்தி வரவில்லை எனில் அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும்  தெரிவித்துள்ளது.    மேலும் இது போல் பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

[youtube-feed feed=1]