டில்லி:

பேஸ்புக் தகவல் திருட்டு காரணமாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica), நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில் முக்கியமாக சில கேள்விகளை கேட்டு எதற்கு பதில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு, கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், பேஸ்புக்கில் இருந்த தகவல்களை திருடி,  உதவி செய்ததாக சமீபத்தில் பிரிட்டனின் சேனல் 4 செய்தி வெளியிட்டது.

இந்த விவகாரம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதற்கான புளுபிரிண்ட்டும் வெளியானது. அதைத்தொடர்ந்து  கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சி.இ.ஓ நிக்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிறுவனத்துடன் இந்திய அரசியல் கட்சிகளும் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கும் இந்த அமைப்பு உதவி செய்திருக்கூடும் என நம்பப்படுகிறது.

தற்போது இந்த பிரச்சினை பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ்மீது குற்றம் சாட்டி வருகிறது. ராகுலை பிரதமராக காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக கூறுகிறது.

இந்நிலையில்,  ராகுல் காந்திக்கு மக்களிடையே அதிகரித்து வரும் அமோக வரவேற்பால் திகிலடைந்து வரும் பாஜக,அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அரசுக்கு தோல்வி கிட்டும் என்று பயந்து வருகிறது.

இந்நிலையில்,  மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான தேர்தல் வியூகம் வகுப்பதற்காக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தின் சி.இ.ஓ நிக்ஸ் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்” என குற்றம் சாட்டினார்.

இந்திய அரசியல் கட்சிகளிடமும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், பாஜக அரசின் திசை திருப்பும் செயம் என கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்திய பேஸ்புக் பயன்படுத்துபவர்களின்   தகவல்கள் திருப்பட்டதா? அதற்காக அவர்களது அனுமதி பெறப்பட்டதா? என்பன உள்ளிட்ட 6 கேள்விகளை அனுப்பி உள்ளது. அதற்கு  வரும் 31-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விபரங்களை தர மறுத்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

[youtube-feed feed=1]