கென்யா

கென்யாவில் வளர்ந்து வந்த உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் மரணம் அடைந்தது.

உலகில் யானையை விட அளவிலும் எடையிலும் பெரியது காண்டா மிருகம்.    இந்த அபூர்வ விலங்கின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.   அதில் வெண்மை நிறமுடைய காண்டா மிருகங்கள் தற்போது உலகில் மூன்று தான் உள்ளது.    கென்யாவில் உள்ள  ஓல் பெஜெதா வனவிலங்குகள் சரணாலயத்தில் இவைகள் வசித்து வந்தன.

அதில் சூடான் என்னும் 45 வயது ஆண் காண்டாமிருகம் தற்போது முதுமை காரணமாக மரணம் அடைந்துள்ளது.   இந்த வகையில் இதுவே கடைசி ஆண் காண்டாமிருகம் ஆகும்.   மீதமுள்ள இரு பெண் மிருகங்கள் சூடானின் மகள் மற்றும் பேத்தி ஆகும்.   இந்த ஆண் மிருகத்தின் மரணத்தினால் இந்த இனம் அடியோடு அழியும் அபாயம் உண்டாகி உள்ளது.

அதையொட்டி விலங்குகள் சரணாலய அதிகாரிகள் சூடானின் உடலில் இருந்து ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள உயிரணுக்களை கொண்டு செயற்கை முறையில் இதே வகை வெள்ளை காண்டா மிருகத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றனர்.    இவ்வாறு இந்த வகை காண்டாமிருகங்கள் அழியாமல் மேலும் வளர்க்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.