வேலூர்: மக்களை கடித்தே கொலை செய்யும் சைக்கோ கொலைகாரர் முனுசாமி ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளதாவது:
“வேலூரை சேர்ந்த முனுசாமி கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே கொலைகளில் ஈடுபட்டு செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஆந்திராவில் தம்பதிகள் கொல்லப்பட்ட போது கிடைத்த கைரேகையை வைத்து முனுசாமியை பிடித்தோம்.
சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இன்னொரு தம்பதிகளின் கொலையும் நடந்தது. இரண்டு கொலையையும் முனுசாமிதான் செய்து இருக்கிறார். இருவரின் உடலிலும் இவரது பல் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவரை விசாரித்து வருகிறார்கள். தொடக்கம் ஆரம்பத்தில் இவர் சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தார். அடிக்கடி சிறைக்கு செல்லும் இவர், பெயிலில் திரும்ப வந்து பின் மீண்டும் திருடுவார். . ஆந்திராவில்தான் அதிகமாக இவர் திருட்டு தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்.
ஆனால் கடந்த வருடம் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து திருடப்போகும் இடத்தில் மனிதர்களைக் கடித்தே கொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
இதுவரை 2017ம் வருடம் மட்டும் 8 கொலைகள் செய்திருக்கிறார். அதற்கு முன்பு எத்தனை கொலைகள் செய்தார் எபது தெரியவில்லை.
இவரால் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், பெண்களும் உண்டு. . 200 ரூபாய் பணம் கொடுக்கவில்லை, பேசுவதற்கு செல்போன் கேட்டு தரவில்லை என்பதற்காகக்கூட கொலை செய்திருக்கிறார்” என்று ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.