சென்னை:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் இன்று 12வது நாளாக அதிமுக எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்/

உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் கடந்த 12 நாட்களாக பாராளுமன்ற வளாகத்தில்  முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க கோரி, அதை  வலியுறுத்தும் வகையில் பதாகைகளையும் ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து 12வது நாளான இன்றும் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து பாராளுமன்ற நடவடிக்கையில் கலந்துகொண்ட அதிமுக எம்.பி.க்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சி களின் எம்.பிக்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.