சென்னை:

மிழகத்தில் இந்து அமைப்பின் ரத யாத்திரையை அனுமதி அளித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்ட மன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து அவரை வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதையடுத்து திமுக உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

ராமராஜ்யம் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடக்கூடாது என அதிமுக கூட்டணி கட்சியினரான கருணாஸ், தமிமுன் அன்சாரி, தணியரசு, அபுபக்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அதை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதால்  அவர்கள்   நேற்று சட்டசபையில் இருநது வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார். அப்போது ரத யாத்திரைக்கு அனுமதி அளித்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். மற்ற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டி, தமிழகத்தில்  இதை வைத்து எதிர்க்கட்சியினர் அரசியல் லாபம் அடைய முயற்சிக்கி றார்கள் என்று குற்றம் சாட்டினார்.

அதையடுத்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து அவர்ளை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டதால்,  அவர்களை  சபை காவலர்களால் வெளியேற்ற உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சபைக்காவலர்கள் அவர்களை சபையைவிட்டு வெளியேற்றினர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து 6 மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரம் வரை ராமராஜ்ய ரத யாத்திரை நடைபெறுகிறது.

கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை பல்வேறு மாநிலங்களின்  பகுதிகளின் வழியாக இன்று தமிழக எல்லைக்குள் வந்துள்ளது. தென்காசி காசி விசுவநாதர் கோவில் அருகே, விசுவ இந்து பரிஷத்தின் ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்க இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிலையில், ரத யாத்திரையை தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கக்கூடாது என  மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி  தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக பல தலைவர்கள் முன் எச்சரிக்கையாக  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் 144 போடப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரத யாத்திரை தமிழகததிற்குள் நுழைந்துள்ளது.