டில்லி:

வெளிநாட்டு கொள்கையில் நேருவின் ஒருமித்த கருத்து கொள்கையை மோடி அரசு சிதைப்பது கண்டத்திற் குறியது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களின் வருடாந்திர கூட்டம் டில்லியில் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வெளிநாட்டு விவகாரம் தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில், ‘‘மறைந்த பிரதமர் நேருவின் ஒருமித்த கொள்கையை மத்திய மோடி அரசு சிதைத்துவிட்டது. மேலும், வெளிநாட்டு கொள்கையில் மத்திய அரசு தான்தோன்றித் தனமாக செயல்படுவதோடு, இந்தியாவின் முக்கிய நட்பு நாடுகளுடனான உறவை தவறாக நிர்வாகம் செய்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த தீர்மானத்தில், ‘‘சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் வெளிநாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த இ ந்தியாவின் சாதனைகளை பிரதமர் மோடி நசுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாண்டங் 50வது ஆண்டு விழாவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ உரையில் அணிசேரா நாடுகளின் இயக்கத்தின் நேரு குறித்து வெளிநாட்டு தலைவர்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது முன்னோர்களை வெளிநாடுகளில் பிரதமர் அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தில் அதிகம் வெளியுறவு விவகாரம் தொடர்பாக இடம்பெற்றிருந்தது. எனினும் பெரும்பாலான பகுதி தெற்கு ஆசியாவை சார்ந்ததாக இருந்தது.

‘‘அண்டை நாடுகளுடன் இந்தியாவின் பொறுப்பற்ற செயல்பாடு சீனாவுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துவிட்டது. அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகியவற்றில் இந்தியா மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அரசியல், உள்நாட்டு பிரிவினை அரசியலுக்கு தான் பயன்படுகிறது. ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் சர்வதேச உணர்வுடன் மேற்கொள்ளப்பட்ட பாகிஸ்தான் ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது. இது கவலை அளிக்கும் விஷயமாகும்.

இந்தியா&பாகிஸ்தான் உறவில் பாதிப்பு ஏற்படுவது சர்வதேச அளவில் அச்சத்தை ஏற்படுத்தும். தே.ஜ.கூட்டணியின் வெளிநாட்டு கொள்கைகள் பேரழிவாக உள்ளது. அகதிகள் விஷயங்களில் இந்தியா வேறுபாடு மற்றும் பாகுபாடு பார்க்க கூடாது. ரஷ்யாவுடனான உறவுகளை இந்தியா தளர்த்த கூடாது. சார்க் நாடுகளுடன் உறவு செயலிழந்த உடலாக உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.