சென்னை:
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து டி.டி.வி.தினகரன் தனது இன்றும் நாளையுமான நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.
டி.டிவி. தினகரன் சமீபத்தில் புதிய கட்சியைத் துவக்கினார். இதையடுத்து தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். நாளை புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் செல்வதாக இருந்தார்.
இந்த நிலையில் அவரது சித்தப்பாவும், வி.கே.சசிகலாவின் கணவருமான நடராஜனின் உடல் நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து தனது இன்றும் நாளையுமான நிகழ்ச்சிகளை தினகரன் ரத்து செய்துள்ளார்.