சென்னை,

சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.


சில மாதங்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் நடராஜனுக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.