புனே:
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஷாப்பிங் மாலில் திருநங்கை நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோனாலி தேவி என்ற திருநங்கை தனது நண்பர் மனோஜ் பாயில்கர் என்பவருடன் புனே போனிக்ஸ் மார்கெட் சிட்டிக்கு நேற்று சென்றார். அப்போது மால் நுழைவு வாயிலில் பாதுகாப்பு ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். திருநங்கைளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளனர்.
திருநங்கைள் நுழைய தடை விதிக்கும் ஆவணங்களை காட்டுமாறு பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவர்கள் எந்த ஆவணத்தையும் காட்டவில்லை. இது தொடர்பான இரண்டரை நிமிட வீடியோ காட்சியை அவர் பதிவு செய்து சமூக வலை தளத்தில் வெளியிட்டார். இது வைரலாகியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக டால்வி தெரிவித்துள்£ர்.
முன்னதாக அந்த மாலின் 5ம் எண் நுழைவு வாயிலுக்கு திருநங்கை சென்றுள்ளார். உடன் வந்த நண்பர் ஆண்கள் பாதுகாப்பு பிரிவுக்கு சென்றார். டால்வி பெண்கள் பிரிவுக்கு சென்றார். பாயில்கர் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பெண் பாதுகாப்பு ஊழியர்கள் டால்வியை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அதேபோல் திருநங்கை என்பதால் உள்ளே அனுமதி கிடையாது என்று மால் நிர்வாகமும் தெரிவித்துள்ளது.
இது குறித்து டால்வி கூறுகையில்,‘‘ இந்த மாலுக்கு நான் ஏற்கனவே பல முறை வந்துள்ளேன். அப்போதெல்லாம் நான் தடுக்கப்படவில்லை. தற்போது மாலின் புதிய கொள்கைப்படி திருநங்கைகளுக்கு அனுமதி கிடையாது என்று கூறி அடாவடியாக நடந்துகொண்டனர்’’ என்றனர்.
ஒரு மணி நேரம் காக்க வைத்து தன்னை உள்ளே அனுப்பியதாக டால்வி பின்னர் தெரிவித்துள்ளார். ஆனால், 5 நிமிடங்களுக்குள் அனைத்து நடைமுறைகளும் முடிந்து அவர் மாலுக்குள் அனுமதிக்கப்பட்டார் என்று மால் நிர்வாகம் தெரிவித்தது.
இதைதொடர்ந்து மால் நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘‘ஜாதி, மதம், பாலின அடிப்படையில் மாலுக்கு வர எவ்வித பாகுபாடும் கிடையாது. அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் சோதனைக்கு பின்னர் உரிய பிரிவுக்கு 5 நிமிடங்களுக்குள் அனுப்பிவிட்டனர். பாதுகாப்பு ஊழியர்களால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.