லண்டன்:
இந்தியாவில் ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்த எனது மகள் இஷாதான் காரணம் என்றும், அவரால்தான் கடந்த 2011ம் ஆண்டு ஜியோ குறித்து முதலில் நினைத்ததாக இந்திய பணக்காரர்களில் முதலிடத்தை பிடித்துள்ளவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனருமான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு ரிலையன்சால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ 4ஜியின் இலவச இணைப்பு மற்றும் நெட்வொர்க் வேகம் காரணமாக இந்தியாவில் இருந்த ஏர்செல் உள்பட பல மொபைல் நிறுவனங்கள், ஜியோவின் போட்டிக்கு ஈடுகொடுக்க முடியாமல், காணாமல் போனது. இதன் காரணமாக இந்திய தொலை தொடர்பு சந்தையில், ஜியோ தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவின்மி தொலை தொடர்பு துறையில், ஜியோ பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்தாகவும், ஜியோவை, உலகின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் டேட்டா நுகர்வோர் நாடாக கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், இதற்கு காரணமான மரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியை கவுரவப்படுத்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டனில் நடைபெற்ற பினான்சியல் டைம்ஸ் நாளிதழ் சார்பாக வழங்கப்பட்ட டிரைவர்ஸ் ஆப் சேஞ் விருது வழங்கும் விழாவில் விருதை பெற்றுக்கொண்ட முகேஷ் அம்பானி , அப்போது பேசியதாவது,
ஜியோ குறித்த யோசதனை கடந்த 2011ம் ஆண்டு தனது மகள் இஷாவால் விதைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், அப்போது இஷா யேல் பள்ளி மாணவராக இருந்தார் என்றும் கூறினார்.
ஒருமுறை விடுமுறை நாளின்போது, வீட்டுப்பாடங்கள் செய்து வந்த இஷா, பாடத்திற்கு தேவையான குறிப்புகளை இணையம் மூலம் தேடி வந்ததாகவும், அப்போது வீட்டில் சரியான இன்டர்நெட் கிடைக்காமல் தடங்கல் ஏற்பட்டது. அதுகுறித்து இஷா தன்னிடம் கூறியபோதுதான், தனக்கு ஜியோ குறித்தஎண்ணம் உதயமானது என்று கூறினார்.
மேலும் தனது பிள்ளைகள் இஷா, ஆகாஷ் ஆகியோர் இளைய தலைமுறையினர் என்றும், அவர்கள் ஆக்கப்பூர்வமான, மிகுந்த எதிர்பார்ப்புடன், உலகில் சிறந்தவர்களாக ஆவதற்கு இன்டர்நெட் சேவை மிகவும் இன்றியமையாதது என்றும் கூறினார்.
இன்றைய இளையதளைமுறையினருக்கு இணையத்தளங்கள் பிராட்பேண்ட் இண்டர்நெட் தொழில்நுட்ப வசதிகள் அவசியம் என்று கூறிய அம்பானி, அவைகளை இந்தியாவை விட்டு விலக முடியாது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஏராளமான திறமை கொண்ட இளைஞர்கள் உள்ள இந்தியா, வரும் 2028 ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய பொருளா தாரம் மிக்க நாடாக விளங்கும் என்றும் என்றும் கூறினார்.
மேலும், அமெரிக்கா 1 ஜி மொபைல் நெட்வொர்க்கில் முன்னோடியாக இருந்தபோது, ஐரோப்பா 2G இல் அறிமுகப்படுத்தியது, சீனா 3 ஜி உடன் இணைந்தது, ஆனால், ஜியோதான் உலகின் மிகப்பெரிய கிரீன்ஃபீல்ட் 4G LTE மட்டும் தரவு நெட்வொர்க்கை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.