சென்னை:

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் நேற்று நடத்தப்பட்ட நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் பாண்டியராஜன் 5 மணி நேரம் தாமதமாக வந்தால்,  நலத்திட்டங்களை பெற வந்த பொதுமக்கள் முனுமுனுத்தனர்.

இதையடுத்து, நலத்திட்டங்களை வாங்க காத்திருந்த பெண்களிடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒரு பெண் மயக்க மடைந்ததால், நிகழ்ச்சியின் பாதியிலேயே அமைச்சர் பாண்டியராஜன் புறப்பட்டு சென்றார்.

அமைச்சரின் 5 மணி நேரம் தாமதம் காரணமாக, நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்பட்டிருந்த பெண்கள், முதியோர்கள், மாணவ மாணவிகள் கோபத்தின் காரணமாக குழப்பம், கூச்சல் ஏற்பட்டதாகவும், இதையடுத்து  தள்ளுமுல்லு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சென்னை அருகே உள்ள  திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுகுத்தகை பகுதியில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆயிரத்து 71 பேருக்கு இலவச சேலை மற்றும் 150 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக மாலை 3 மணிக்கு வருவதாக கூறப்பட்ட அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இரவு 8 மணியளவில் விழாவிற்கு வந்தார்.

வெகு நேரம் தாதமம் காரணமாக விழா பகுதியில் அடைத்து வைக்கப்பட்டருந்த பெண்கள்  கோபம் காரணமாக  சலசலப்பில் ஈடுபட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சேலை வழங்கும் நிகழ்ச்சியில் தள்ளுமுல்லுவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

‘இதில் சிக்கிய அதிமுகவை சேர்ந்த முக்கிய பெண் ஒருவர் மயங்கி விழுந்ததாகவும், இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்  உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.