சென்னை

ன்று சென்னையின் பல பகுதிகளில் வோடஃபோன் இணைப்பில் பிரச்னை உண்டாகி உள்ளது.

ஏர்செல் இணைப்பில் முதலில் பிரச்னை உண்டாகியது.    அதன் பிறகு அந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது நெட் ஒர்க் முழுவதுமாக நின்று போனது.    வேறு நிறுவனங்களுக்கு மாற்றவும் வழி இல்லாமல் வாடிக்கையாளர்கள் துயருறுகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை அன்று ஏர் டெல் இணைப்பில் பாதிப்பு உண்டானது.   அந்த நிறுவனமும் மூடப்படலாம் என வதந்திகள் பரவின.   அதை ஒட்டி ஏர்டெல் அலுவல்கம் முன்பு பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   தற்போது அந்த பிரச்னை சரிசெய்யப் பட்டு ஏர்டெல் இயக்கம் சரியாக உள்ளது.

இன்று காலை முதல் சென்னையின் பல பகுதிகளில் வோடஃபோன் இணைப்பு கிடைக்காமல் சேவை பாதிப்புக்கு உள்ளாகியது.   இது குறித்து வோடஃபோன் தனது அதிகார டிவிட்டர் பக்கத்தில், “தற்போது தற்காலிகமாக சில பிரச்னைகள் உண்டாகி உள்ளது.  அவற்றை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.   வோடஃபோன் சேவை மிக விரைவில் சீரடையும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.