டில்லி

க்களைவையில் விவாதம் இல்லாமல் 2 மசோதாக்களும் 218 திருத்த மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களைவையில் தினமும் அமளி நடைபெறுவதன் காரணமாக இரு அவைகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன.   இதனால் எந்த ஒரு மசோதாவும் மற்றும் திருத்தங்களும் நிறைவேற்றப்படாத நிலை உள்ளது.   நேற்று சபை கூடியதும் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள் அவையின் மையப்பகுதியில் திரண்டனர்.  ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு கோரிக்கைகளுக்காக கோஷம் எழுப்பினர்.

அந்த சமயத்தில் குறுக்கிட்டு பேசிய மத்திய அமைச்சர் அனந்த குமார், “அவை அலுவல்கள் சரியாக நடக்க உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும்.    தொழிலதிபர்களின் வங்கி மோசடி,   ஆந்திர மநில சிறப்பு அந்தஸ்து,  காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல விவகாரங்களை விவாதிக்க இந்த அவை உத்தேசித்துள்ளது.   தயவு செய்து உறுப்பினர்கள் தங்கள் இருக்கைக்கு செல்லவும்:  என கோரிக்கை விடுத்தார்.

அவர் வேண்டுகோளை உறுப்பினர்கள் ஏற்காததால் சபை இருமுறை ஒத்தி வைக்கப்பட்டது.    இந்த அமளிகளுக்கு இடையே சிறப்பு நிவாரண மசோதா மற்றும் பணிக் கொடை மசோதா ஆகிய இரு மசோதாக்களை குரல் வாக்கெடுப்பு மூலம் விவாதம் இன்றி அவை நிறைவேற்றியது.   மேலும் 218 திருத்த மசோதாக்களும் இதே முறையில் நிறைவேற்றப்பட்டன.   மொத்தம் 30 நிமிடங்களில் இவை நிறைவேற்றப்பட்டன.