சென்னை:
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 8வது முறையாக தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டம் முடிவடைந்ததும், கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 19-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை தமிழக நடைபெறும் அறிவித்துள்ளார்
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மாலை 3.30 மணிக்கு சிறப்புக்கூட்டம் கூடியது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், “பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 19-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும் என்று கூறினார்.
மேலும், நாளை மற்றும் தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால், பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த வாரம் தள்ளிவைக்கப் பட்டதாக கூறிய அவர், 4 நாட்கள் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 2018-19 ஆம் நிதியாண்டிக்கான தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படும்” எனக் கூறினார்.