சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நாளை (மார்ச் 16) தொடங்கும் இந்த பொதுத்தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைகிறது.
ஏற்கனவே பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பிளஸ்1 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை கடைசி தேர்வு நடைபெற உள்ள நிலையில், எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வும் நாளை தொடங்குகிறது.
இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 10 லட்சம் பேர் எழுத இருக்கிறார்கள். 9லட்சத்து 64ஆயிரத்து 491 மாண மாணவிகள் பள்ளிகள் மூலமும், 36,649 பேர் தனித்தேர்வர்களாகவும் தேர்வை எதிர்கொள்கிறார்கள்.
இதற்காக 3 ஆயிரத்து 609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள தாகவும், தேர்வின் நிகழும் முறைகேடுகளை தடுக்க 6,900 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி. (10ம் வகுப்பு) ஆண்டு தேர்வு அட்டவணை:
16.03.18 – தமிழ் முதல் தாள்
21.03.18 – தமிழ் இரண்டாம் தாள்
28.03.18 – ஆங்கிலம் முதல் தாள்
04.04.18 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.04.18 – கணிதம்
12.04.18 – மொழி (விருப்பத் தேர்வு).
17.04.18 – அறிவியல்
20.04.18 – சமூக அறிவியல்
நாளை நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 186 சிறை கைதிகளும் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேர்வெழுத புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அறையில் அவர்கள் தேர்வை எழுதுகிறார்கள். இதற்காக, மற்ற சிறையில் உள்ள கைதிகள் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பொதுத்தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்காலங்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். கட்டுப்பாட்டு அறையை பின்வரும் தொலைபேசி எண்களில் மாணவர்களும், பொதுமக்களும் தொடர்புகொள்ளலாம். 8012594105, 8012594115, 8012594120, 8012594125