சென்னை

முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் திமுக தலைவர் கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றார்.

கடந்த 2004 முதல் 207 வரை திமுகவை சேர்ந்த தயாநிதி மாறன் மத்திய தொலை தொடர்பு அமைச்சராக பதவி வகித்தார்.   அந்த சமயத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பி எஸ் என் எல் இணைப்பில் முறைகேடு நடத்தி சன் டிவி நிறுவனத்துக்கு பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.   அதனால் அரசுக்கு ரூ. 1.8 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.   குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவர் சகோதரரும் சன் டிவி உரிமையாளருமான கலாநிதி மாறன் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.   அதை ஒட்டி திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்த தயாநிதி மாறன் அவரிடம் வாழ்த்துப் பெற்றார்.