ஈரோடு
குரங்கணி தீ விபத்தில் சிக்கி மரணம் அடைந்தவர்களுக்காக மலையேறும் பயணத்தை ஏற்பாடு செய்த பிரபு கைது செய்யப்பட்டுள்ளார்.
குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றம் செய்த 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மலையேற்றம் மேற்கொண்டவர்கள் சரியான பயிற்சி இன்றியும், அனுமதி இன்றியும் ஏஜண்ட் பிரபு என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.
அதை ஒட்டி இன்று ஈரோட்டை சேர்ந்த மலையேறும் பயணத்தை ஏற்பாடு செய்த பிரபுவை ஈரோட்டில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்த காவல் துறையினர் அவரை தேனிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.