க்னோ

த்திரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் உள்ளிட்ட மூன்று மக்களவை தொகுதிகளின் இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலமான உத்திரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் உள்ளிட்ட மூன்று மக்களவை இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.   பீகார் மாநில முதல்வர் யோகியின் கோட்டை என கருதப்படும் கோரக்பூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “எங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்த மாயாவதிக்கும் அவரது பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.   பாஜக அரசின் முறையற்ற நிர்வாகத்துக்கு மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர்”  என தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் கந்தி, “பாஜக மீது உத்திரப் பிரதேச மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.   அதனால் அவர்கள் சமாஜ் வாதி கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.   காந்திரஸ் உ.பி. யில் கட்சியை மேலும் வளர்த்து வலிமயுள்ள கூட்டணி ஒன்றை அமைக்கும் பணியில் இறங்கி உள்ளது”  எனத் தெரிவித்தார்.