ண்டன்

றைந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டிபன் ஹாக்கிங் இருவருக்குமிடையில் வியக்கத் தகுந்த பல ஒற்றுமைகள் இருக்கின்றன.

ஆங்கிலத்தில் “வைஸ்மேன் பிஹேவ் அண்ட் திங்க் அலைக்” என்பார்கள்.   அதாவது புத்திசலிகள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள்.  ஒரே முறையில் நடப்பார்கள் என பொருள்.   விஞ்ஞானிகள் ஸ்டிபன் ஹாக்கிங் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் ஆகியோர் ஒரே மாதிரி சிந்தித்தார்களா என்பது தெரியவில்லை.   ஆயினும் இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் உள்ளன.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் மற்றும் ஸ்டிபன் ஹாக்கிங் ஆகிய இருவருக்குமே விஞ்ஞான அறிவு எக்கச்சக்கமாக  இருந்த போதிலும் இருவருமே பள்ளிப் பருவத்தில் முட்டாள் என அழைக்கப்பட்டனர்     இருவருக்குமே மூளை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருந்துள்ளன.   ஹாக்கிங்க்குக்கு மூளை நரம்பியல் குறைபாடு என்றால் ஐன்ஸ்டினுக்கு ஆட்டிசம் என்பதே சிறு வித்தியாசம்.

குடும்ப வாழ்க்கையிலும் ஒரு ஒற்றுமை உள்ளது.  ஐன்ஸ்டின் தனது முதல் மனைவி மிலேவா மார்க் என்பவரை விவாகரத்து செய்தார்.   அதன்  பின் முதல் மனைவியின் தங்கை எல்சா லொவெந்தாவை மணமுடித்தார்.    ஹாக்கிங்  தனது முதல் மனைவி ஜேனை விவாகரத்து செய்த பின் ஜேனுடைய தங்கை எலைன் மாசன் என்பவரை மணமுடித்தார்.

இருவருக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருந்ததால் ஹாக்கிங்கை பலரும் இன்னொரு ஐன்ஸ்டின் என அழைத்தனர்.   ஹாக்கிங் அதை ஒப்புக் கொள்ளவில்லை.   பலமுறை நான் வேறு, ஐன்ஸ்டின் வேறு என கூறி உள்ளார்.   ஆனால் அந்த ஒற்றுமை ஹாக்கிங் மரணத்திலும் தொடர்ந்துள்ளது.

ஐன்ஸ்டின் இறந்த அதே 76 ஆம் வயதில் ஹாக்கிங் இறந்துள்ளார்.   அது மட்டும் இன்றி ஐன்ஸ்டின் 1875 ஆம் வருடம் மார்ச் 14ல் பிறந்தார்.   ஹாக்கிங் 2018ஆம் வருடம் மார்ச் 14ல் மரணம் அடைந்துள்ளார்.