டில்லி

பாரத ஸ்டேட் வங்கி குறைந்த பட்ச தொகைக்கும் குறைவாக கணக்கில் வைத்திருப்போருக்கு விதிக்கும் அபராதத்தத்தை வரும் ஏப்ரல் 1 முதல் குறைக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி தனது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் குறைந்த பட்ச தொகையாக ரூ.3000  என அறிவித்துள்ளது.   அதை விட குறைவாக வைத்திருப்போருக்கு அபராதம் விதித்து வருகிறது.   இதற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அந்த எதிர்ப்பை ஒட்டி தற்போது ஸ்டேட் வங்கி அபராத தொகையை குறைத்துள்ளது.   அதன் படி நகர்ப்புற மற்றும் புற நகர் பகுதிகளில் வசிப்போருக்கு மாதம் ரூ. 50 ஆக இருந்த அபராதம் தற்போது ரூ. 15 மற்றும் ஜிஎஸ்டி என மாற்றப்பட்டுள்ளது.    அத்துடன் சிறு நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிப்போருக்கு ரூ. 40 ஆக இருந்த மாத அபராதக் கட்டணம் தற்போது சிறு நகர் பகுதிகளில் ரூ. 12 + ஜி எஸ் டி எனவும் கிராமப் புறங்களில் ரூ. 10 + ஜீ எஸ் டி எனவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வரும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது