காத்மாண்டு: நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 50 பேர் பலாயனதாக  தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தை சேர்ந்த பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 71 பேருடன் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்று கொண்டிருந்தது. நேபாளத்தின் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்தது.

அப்போது நிலை தடுமாறி அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.  படுகாயம் இதில் விமானம் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில், 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். விமானம் தீப்பற்றியதை அறிந்த திரிபுவன் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை துண்டித்து எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.   மோசமான வானிலையால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமான விபத்தை தொடர்ந்து காத்மாண்டு திரிபுவன் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.