தேனி:

தேனி காட்டுத் தீயில் 10 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். மீதமுள்ள அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தேனி அருகே குரங்கணி மலைப் பகுதியில் இன்று காட்டுத் தீ ஏற்பட்டது. பரவி வரும் தீயில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் என 40 பேர் சிக்கி தவித்தனர். விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்,‘‘ மர்ம நபர்களால் காட்டுத் தீ ஏற்படுத்தப்படுகிறது. 10 பேர் தவிர்த்து மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். அந்த 10 பேரையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளார்’’ என்றார்.