டில்லி:

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் திடீரெ காட்டு தீ ஏற்பட்டுள்ளது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 50 மாணவ மாணவிகள் சிக்கியுள்ளனர். மீட்டு பணியில் ஈடுபட விமானபடைக்கு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘தேனி மாவட்ட கலெக்டருடன் சற்று முன் தொலைபேசியில் பேசினேன். 10- முதல் 15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.

தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்தும் தனியார் உதவி அளிக்கின்றனர். டாக்டர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பியிருந்தாக கலெக்டர் தெரிவித்தார்’’ என்று நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டுள்ளார்.