ஆன்மிகப்பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விரைவில் அரசியல் கட்சி துவக்க இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகக்  கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், ரஜினி ஆன்மிகப் பயணமாக இமயமலை  சென்றுள்ளார். இங்கிருந்து கிளம்பும்போது, சென்னை விமான நிலையத்தில் அவரிடம், “சென்னையில் பட்டப்பகலில் ஒரு பெண் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.. சட்டம் ஒழுங்கு கெட்டிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி நிலவுகிறது.. இவை குறித்து உங்கள் கருத்து என்ன” என்று  செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டு ரஜின புறப்பட்டார்.

இந்த நிலையில் இமாச்சல் பிரதசம் வந்த ரஜினியிடம் ஏ.என்.ஐ. செய்தியாளர் பேசினார். அப்போது ரஜினி, “பயணம் மிக அருமையாக உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆன்மிக பயணம் வந்திருக்கிறேன். இந்த நிலையில் அரசியல் பேச விரும்பவில்லை” என்றார்.

தான் செய்ய இருப்பதே ஆன்மிக அரசியல் என்று கூறிய ரஜினி, ஆன்மிக பயணத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.