பீஜிங்
சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இஸ்லாமிய ஊடுருவலை தடுக்க வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீன நாட்டில் சுமார் 2 கோடி இஸ்லாமியர்கள் நாட்டின் மேற்கு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களில் துருக்கி மொழி பேசுபவர்கள் அதிகம் உள்ளனர். சீனாவில் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தர்போது சில வருடங்களாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மதக் கலவரம் மற்றும் வன்முறை ஏற்படக்கூடும் என்னும் சந்தேகத்தில் சீன அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
சமீபத்தில் சீன பாராளுமன்றத்தில் அரசு மற்றும் சீன இஸ்லாமியர்களின் கூட்டமைப்பு தலைவர் யாங் ஃபாமிங் இது குறித்து உரையாற்றினார். அப்போது அவர், “பல காலமாக இஸ்லாம் நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளது. ஆனால் தற்போது இஸ்லாமிய மக்களால் உருவாகும் பல பிரச்னைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. உதாரணமாக சில மசூதிகள் முழுக்க முழுக்க வெளிநாட்டு வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹலால் என்பது அதிகமாக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற வாழிக்கையில் மதம் நுழைவது அதிகாமாகி உள்ளது.
நமது மக்களில் பலர் தேசத்தின் சட்டத்தை விட மதச் சட்டங்களுக்கு அதிகம் மதிப்பளிக்கின்றனர். அவர்கள் இந்நாட்டு குடிமகன் என்பதை விட மத நம்பிக்கையாளர்கள் என காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். நாம் இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சீனாவில் உள்ள இஸ்லாமியர்கள் தாங்கள் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறவாமல் இருக்க வேண்டும். மதவெறிக்கு இடம் அளிக்கக் கூடாது. மத வழக்கங்களும் மதம் சம்பந்தப்பட்ட கட்டிடங்களும் சீனக் கலாசாரத்தை ஒட்டியதகவே இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
சீன அரசு அதிகாரி ஒருவர் இந்த உரையை ஒட்டி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். . அதில், “சீனாவின் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இஸ்லாமியர்கள் ஊடுருவி வருகின்றனர். அவர்கள் சீனா நாட்டில் தீவிர வாத தாக்குதலை உண்டாக்க முயலுகின்றனர். சீனாவில் மதச் சுதந்திரம் கொடுக்கப்ப்பட்டுள்ளது. ஆனால் மத்க் கலவரத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. இதை சீன நாட்டு இஸ்லாமியர்கள் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் இஸ்லாமிய ஊடுருவலை தடுக்க வேண்டும். இந்த அரசு எப்போதும் இஸ்லாமிய ஊடுருவலை சகித்துக் கொள்ளாது” என எச்சரிக்கை விடுத்துள்ளது.