டில்லி:

விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக உள்ள சுரேஷ் பிரபுவுக்கு கூடுதல் பொறுப்பாக விமான போக்குவரத்து துறை அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியது. அக்கட்சிய சார்பில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த அஷோக் கஜபதி ராஜு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் மண் அறிவியல் துறை அமைச்சர் ஒய் எஸ் சவுத்திரி ஆகியோர் பதவி விலகினர்.

அஷோக் கஜபதி ராஜுவின் ராஜினாமா காரணமாக விமான போக்குவரத்து துறை அமைச்சராக சுரேஷ் பிரபு நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.