சென்னை:

நாட்டிலேயே பாதுகாப்பான மாநிங்களில் தமிழகம் 6வது இடத்தில் உள்ள நிலையில், காவலர் தற்கொலையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்பது  ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

பணிச்சுமை காரணமாகவே காவலர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கு ஒருசில நாள் முன்பு சென்னை அயனாவரத்தில் காவல் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்று காவலர்களின் தற்கொலைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்றமும் சமீபத்தில்  காவலர்களின் பணி மற்றும் மனஅழுத்தம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் காவலர்கள் தற்கொலையில் தமிழகத்தில் முதலிடத்தில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு (2016) நடைபெற்ற காவலர்கள் தற்கொலை குறித்த ஆய்வில், கடந்த ஆகஸ்டு மாத நிலவரப்படி‘ 166 காவலர்கள்  தமிழகத்தில்  தற்கொலை செய்து உயிரிழந்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 161 காவலர்கள் தற்கொலை செய்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புள்ளி விவர பட்டியலில்  61 காவலர்கள் தற்கொலையுடன் கேரளா கடைசி இடத்தில் உள்ளது.

இவர்கள் தற்கொலைக்கு, அதிக பணிச் சுமை, மன அழுத்தம்,  சொந்த பிரச்சினை போன்றவை காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.