சென்னை,

பொறியியல் கல்விக்கு மாணவர்களிடையே  மவுசு குறைந்து வருவதால் நாடு முழுவதும் புற்றீசல் போல தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டது.  இந்நிலையில்,  இந்த ஆண்டு மேலும் 17 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாகவும், மேலும் 14 பொறியியல் கல்லூரிகள் மூட அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக இந்த கல்வி ஆண்டில் 25 பொறியியல்கல்லூரிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

நாடு முழுவது உள்ள பொறியியல் கல்லூரிகளில் 800க்கும் மேற்பட்ட பொறியியல்  கல்லுரிகளை  மூட ஏஐசிடிஇ முடிவு செய்திருப்பதாக அறிவித்து உள்ளது. மாணவர்க  சேர்க்கை குறைவு  மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டு வருவதாக கூறப்பட்டது.

நாட்டிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில்தான் உள்ளன.  ஆரம்பத்தில் 600க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்  படிப்படியாக குறைந்து தற்போது 500க்கும் குறைவான கல்லூரிகளே செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ள நிலையில், பொறியியல் படிப்பிற்கான மோகமும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே குறைந்து வருகிறது.

இந்நிலையில், பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையே நடைபெறாத சூழல் நிலவி வருகிறது. அதன் காரணமாக இந்த ஆண்டும் 17 கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பட முடியாது என 12 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூட அனுமதி கேட்டும்,  5 எம்.பி.ஏ. கல்லூரிகளும் தொடர்ந்து செயல்படும் வகையில் விண்ணப்பிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில்,  இந்த கல்வி ஆண்டில் 17 பொறியியல் சார்ந்த கல்லூரிகள் மூடப்படுவதாகவும், மேலும்  14 பொறியியல் கல்லூரிகளை மூட அனுமதி கேட்டு, அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக 25 பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் நிலை உருவாகி உள்ளது.

மேலும் 163 பொறியியல்  கல்லூரிகள், மாணவர்கள் சேராத விரும்பாத  பல வகை பாடப் பிரிவுகளை மூடவும் அனுமதி கேட்டு  விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழக தகவலகள் கூறுகின்றன.