டில்லி:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் மத்திய நீர்வளத்துறை செயலர் மாநில அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் 4 மாநிங்கள் சாரபாக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதன்படி டில்லியில் உள்ள மத்திய நீர்வளத்துறை அலுவலகத்தில் இன்று பகல் 12 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய நீர்வளத்துறை செயலர், தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பிரபாகர் ஆகியோர் கலந்துகொண்டனர். கர்நாடக அரசு சார்பில் அந்த மாநில தலைமை செயலாளரும் கலந்துகொண்டார். புதுச்சேரி, கேரளா சார்பிலும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், வழிமுறைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆலோசனையின் முடிவில், காவிரி மேலாண்மை வாரியத்தில் இடம்பெற உள்ள அந்தந்த மாநில பிரதிநிதிகளின் பெயர் பட்டியலையும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்ய 4 மாநில அதிகாரிகளுக்கு மத்திய நீர்வளத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.