ஜெட்டா.

கிப்து நாட்டுப் பாடகர் டாமர் ஹாஸ்னியின் இசை நிகழ்வின் போது  நடனமாட மற்றும் நாகரீக உடை அணிந்து வர சௌதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது.

இந்த மாதம் 30 ஆம் தேதியன்று எகிப்தின் பிரபல பாடகர் டாமர் ஹாஸ்னி ஜெட்டா நகரில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.   அதைக் காண அரேபிய மக்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.    இந்த நிகழ்வுக்கான அனைத்து டிக்கட்டுக்களும் விற்று தீர்ந்து விட்டன.

இந்த நிகழ்வுக்கு வரும் ரசிகர்களுக்கு, சௌதி அரேபிய அரசு ஏராளமான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

இந்த நிகழ்வுக்கு வரும் ரசிகர்கள் எழுந்து ஆடக் கூடாது   

12 வயதுக்குட்பட்டோருக்கு அனுமதி இல்லை

ஆண்களும் பெண்களும் தனித்தனியே அமர வேண்டும்

நவீன நாகரீக உடைகளை அணிந்து வரக்கூடாது.

போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கு ரசிகர்கள் இணைய தளங்கள்ல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.    அகமது என்பவர் தனது டிவிட்டர் பதிவில், இந்த கட்டுப்பாடுகளை குறிப்பிட்டுவிட்டு, “இது என்ன கொண்டாட்டமா?  அல்லது இறுதிச் சடங்கா?” என வினவி உள்ளார்.