டில்லி
இந்திய கட்டிட வடிவமைப்பாளர் பாலகிருஷ்ண தோஷிக்கு நோபல் பரிசுக்கு சமமான சர்வதேச விருதான பிரிட்ஸ்கர் பிரைஸ் விருது வழங்கப்பட்டுள்ளது.
கட்டிட வடிவமப்பாளர் உலகில் பிரிட்ஸ்கர் பிரைஸ் விருது என்பது நோபல் பரிசுக்கு சமமான சர்வதேச விருதாகும். புகழ் பெற்ற இந்த விருது கட்டிட வடிவமைப்பாளர் பலரது கனவாக இருந்துள்ளது. சர்வதேச அளவில் இந்த விருதுக்கு ஒரு தனி மதிப்பு உள்ளது.
பெருமைக்குரிய இந்த விருது இந்த வருடம் (2018) இந்தியக் கட்டிட வடிவமைப்பாளரான பாலகிருஷ்ண தோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் பல பழைய கட்டிடங்களை கிழக்கத்திய கலாசாரத்துக்கு ஏற்ப வடிவமத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான தேர்வுக் குழு பாலகிருஷ்ண தோஷியின் கட்டிக்கலை வடிவமைப்புத் திறமையை வெகுவாக புகழ்ந்துள்ளது.
பூனாவில் பிறந்த பாலகிருஷ்ண தோஷி ஏற்கனவே தனது கட்டிட வடிவமைப்புக் கலைக்காக பல விருதுகளைப் பெற்றவர். அவர் இந்த விருது தனக்கு கிடைத்ததற்கு குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் இந்த விருதை தனது குருவான சார்லஸ் எட்வர்ட் ஜான்னரெட்டுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் பாலகிருஷ்ண தோஷி என்பது குறிப்பிடத்தக்கது.