டில்லி

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ரகிமின் கூட்டாளி ஃபரூக் தக்லாவை டில்லி விமான நிலையத்தில் சிபிஐ கைது செய்தது.

மும்பையின் நிழல் உலக தாதா எனக் கூறப்படும் தாவூத் இப்ரகிம் மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார்.   இவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.  சமீபத்தில் இவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது.    இவரையும் இவரது கூட்டாளிகளையும் சர்வதேச காவல்துறையினர் திவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தாவுத் இப்ரகிமின் முக்கிய கூட்டாளிகளில் ஒருவரான முஸ்டாக் முகமது மியா என்கிற ஃபரூக் தக்லா டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளி நாடு செல்ல குடியுரிமை அலுவலகம் வந்திருந்தார்.    அப்போது அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவரை இன்று விசேஷ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார் என சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

[youtube-feed feed=1]