பெங்களூரு:

பெங்களூரில் லோக் ஆயுக்த்தா நீதிபதி விஸ்வநாத ஷெட்டி மீது இன்று காலை கொலை வெறி தாக்குதல் நடைபெற்றது. அப்போது அவருக்கு கத்திக்குத்தும் விழுந்தது.  இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

74 வயதான  விஸ்வநாத ஷெட்டி மீது அடையாளம் தெரிய நபர்கள் சிலர் அவர்து வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. மிகவும் பாதுகாப்பு மிகுந்த இந்த இடத்திற்குள் மர்ம நபர்கள் எப்படி வந்தார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறும்போது, ஷெட்டி தற்போது அபாய நிலையில் இருந்து மீண்டு விட்டதாகவும், அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து, கத்திக்குத்துக்கு உள்ளான நீதிபதி விஸ்வநாத் ஷெட்டியை அம்மாநில முதல்வர் சித்தராமையா சந்தித்து நலம் விசாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து, போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடி காமிரா பதிவின் மூலம் விசாரணை நடத்தி வருவதாகவும், அதில், அவரை தாக்கியவர்களில் ஒருவர் பெயர் தேஜாஜ் சர்மா என்றும், அவரை கைது செய்துள்ளதாகவும்,  மற்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளனர்.

நீதிபதி மீது தாக்குதல் நடைபெற்றது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.