சென்னை:

ன் அனுமதி இன்றி பெரியார் சிலை பற்றி பதிவிட்ட பதிவையும்,  அட்மினையும்  நீக்கிவிட்டேன்  என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், இனிமேல் #ஹெச்ராஜா சமூக வலைத்தளங்களில் ஏதேனும் பதிவிட்டால், அது அவருடைய சொந்தப் பதிவா அல்லது அவருக்கே தெரியாமல் யாராவது பதிவு செய்து விட்டார்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? வெட்கங்கெட்ட பிழைப்பாகி விட்டதே என்று சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பதிவில் கிண்டலடித்துள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து அங்குள்ள லெனின் சிலையை பாஜகவினர் அப்புறப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பாஜக எச்.ராஜா,

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்ட வீடியோ காட்சியை பகிர்ந்த அவர், “லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில், இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை” என்று கூறியிருந்தார்.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது தமிழக அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், மாணவர்கள் என அனைவரும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், தன்னுடைய பக்கத்தில் வெளியான பதிவுக்கு எச். ராஜா வருத்தம் தெரிவித்து இன்று வேறு ஒரு பதிவை வெளியிட்டார். அதில்,  “கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண்பட்டிருக்குமானால் அதற்கு என் இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப் படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.” என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில்  இன்று காலை டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, தம் அனுமதி இல்லாமல் அந்தப் பதிவை இட்ட நிர்வாகியை நீக்கிவிட்டதாகக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், பாஜகவுக்கும் தமக்கும் பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு சென்று சித்தாந்தப் போராட்டம் நடத்துவதில்தான் உடன்பாடு இருப்பதாக கூறிய அவர், சிலைகளை உடைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று திமுக உள்பட தமிழக அரசியல் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட சுப.வீரபாண்டியன்,  எச் ராஜா வருத்தம் தெரிவித்தாலும் அவருக்கு எதிராக போராட்டம் நடந்தே தீரும் என்று கூறியிருந்தார்.

மேலும், எச்.ராஜாவின் இன்றைய பதிவு மற்றும் பேட்டி குறித்து சுப.வீரபாண்டியன்  தனடு டுவிட்டர் வலைளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

இனிமேல் #ஹெச்ராஜா சமூக வலைத்தளங்களில் ஏதேனும் பதிவிட்டால், அது அவருடைய சொந்தப் பதிவா அல்லது அவருக்கே தெரியாமல் யாராவது பதிவு செய்து விட்டார்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?

வெட்கங்கெட்ட பிழைப்பாகி விட்டதே 

என்று சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டர் பதிவில் கிண்டலடித்துள்ளார்.