ஹெல்சிங்கி:

பெண்கள் மட்டுமே செல்லக் கூடிய ‘சூப்பர் ஷி தீவு’ விரைவில் தொடங்கப்படவுள்ளது.


ஃபின்லாந்து கடற்கரை பகுதியில் இதை தொடங்க பெண் தொழிலதிபரான கிறிஸ்டினா ரோத் திட்டமிட்டுள்ளார். இங்கே ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

இது குறித்து ரோத் கூறுகையில், ‘‘ சமூகத்தில் உள்ள அழுத்தத்தில் இருந்த பெண்கள் விடுபட்டு விடுமுறை காலத்தை கழிக்க ஒரு இடம் வேண்டும் என்று நினைத்தேன். இங்கு அமைக்கப்படும் 4 சொகுசு அறைகளில் 10 பேர் தங்கலாம்.

ஆரோக்கிய செயல்பாடுகள் மற்றும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. எனது ஆண் நண்பர் மூலம் ஃபின்லாந்து அழகை ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அந்த தீவை நான் வாங்கியுள்ளேன்’’ என்றார்.

இதற்கென்று பிரத்யேக வாழ்க்கை முறை வலைப்பதிவு ஏற்படுத்தப்பட்டு பெண்கள் நண்பர்களாக இணைக்கப்படுவார்கள். இதர பெண்களும் இணை ஊக்குவிக்கப்படுவார்கள்.