டில்லி
மேகாலயா, திரிபுரா, மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் மொத்தமாக 79% வெற்றி மற்றுமே பெற்றுள்ள நிலையில் பாஜக மூன்று மாநிலத்திலும் வெற்றி பெற்றதாக கொண்டாடி வருகிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநிலங்களில் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றதாக அந்த கட்சி கொண்டாடி வருகிறது. இதில் திரிபுராவில் மட்டுமே 35 இடங்களுடன் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
மேகாலயாவில் பாஜக 46 வேட்பாளர்களை நிறுத்தியது. அதில் இருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 96% தோல்வியை இந்த மாநிலத்தில் பாஜக சந்தித்துள்ளது. அதே போல் நாகாலந்தில் 20 பேரில் 12 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இவ்வகையில் மொத்தம் உள்ள இடங்களில் 79% தோல்வியை பாஜக சந்தித்துள்ளது.
அதே போல மேகாலயாவில் 22 இடங்களை வென்றுள்ள காங்கிரஸை பின் தள்ளி விட்டு 2 இடங்களை மட்டுமே வென்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்தது. அக்கட்சிக்கு காங்கிரஸ் அல்லாத மற்ற கட்சி உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததை ஒட்டி அந்த முயற்சியில் பாஜக வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
அதே போல் நாகாலாந்து சட்டசபையில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தேசிய குடியரசு முன்னேற்றக் கட்சி இரண்டும் சேர்ந்து 12 மற்றும் 16 என 28 இடங்களை வென்றுள்ளது. ஆளும் நாகா மக்கள் முன்னணி 27 இடங்களும் அதன் கூட்டணிக் கட்சி 2 இடங்களையும் வென்றுள்ளது. இருந்தும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது.