
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவைப் பிரபல டிவி நகைச்சுவை நடிகர் ஜிம்மி கெம்மல் தொகுத்து வழங்குகிறார். இவர்தான் கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவையும் தொகுத்தளித்தார்.
மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் திரைப்பட விருதுகள் அளிக்கப்பட இருக்கின்றன.
முதல் விருதாக சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை சாம் ராக்வெல் என்ற நடிகர் ‘த்ரீ பில் போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங், மிசெளரி’ (Three Billboards Outside Ebbing, Missouri’) என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு அளிக்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel