
பெரும் பொருட்செலவில் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. 2.0 திரைப்படம். ரஜினிகாந்த் – எமி ஜாக்சன் ஜோடியுடன் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இந்தப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி வருகிறது.
இந்தப் படம் எப்போது வெளியாகும் என்பது இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த 2.0 படத்தின் டீசர் இணையதளங்களில் லீக் ஆகி உள்ளது. இதை பலர் பார்த்துள்ளனர். இந்த டீசர் முடிவில் ரஜினிகாந்த் குக்கூ என கூவுவது போல் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த 1.27 நிமிடம் ஓடக்கூடிய டீசர் அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே இணையதளங்களில் லீக் ஆகி உள்ளது. இந்த நிகழ்வு படக்குழுவினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
[youtube-feed feed=1]