மும்பை
ஐ என் எக்ஸ் முறைகேடு வழக்கு விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்தை மும்பைக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் ஐ என் எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அவர் நடத்தி வந்த கன்சல்டன்சி விவகாரம் மூலம் ரூ 10 லட்சம் ஆதாயம் பெற்றதாக கூறப்பட்டு அதையொட்டி கார்த்தி கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளார். வரும் ஆறாம் தேதிவரை அவரை விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதையொட்டி அவர் சிபிஐ அதிகாரிகளால் மும்பை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் மீதான விசாரணையை சிபிஐ தொடர்ந்து நடத்தி வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுடன் கார்த்தியையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்தவும் சிபிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.