ர்ன் தரன், பஞ்சாப்

சியப் பெண்கள் மல்யுத்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்ணான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நவ்ஜோத் கவுர் க்கு பாராட்டு மழை குவிந்த வண்ணம் உள்ளது.

பஞ்சாப் மாநிலம், தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள பாக்ரியா என்னும்சிற்றூரை சேர்ந்தவர் 28 வயதான நவ்ஜோத் கவுர்.    விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தனது மல்யுத்த  போட்டியை ஆரம்பித்தார்.    முதலில் இவருக்கு பயிற்சி கொடுத்தவர் அசோக் குமார் ஆவார்.   பயிற்சியில் முன்னேறி கடந்த 2013 ஆம் வருடம் ஆசிய பெண்கள் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும்,  2014 ஆம் வருடம் காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சமீபத்தில் நடந்த ஆசிய பெண்கள் மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் கலந்துக் கொண்ட நவ்ஜோத் கவுர் ஜப்பான் வீராங்கனையை இறுதிச் சுற்றில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.   இந்தப் பதக்கத்தை வென்ற முதல் இந்தியப் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாபில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் தற்போது ரெயில்வேயில் முதுநிலை எழுத்தராக பணி புரிகிறார்.   இவரது வெற்றியை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.  முதல்வர், “ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் தங்கத்தை வென்று இந்தியாவுக்கு, பஞ்சாபுக்கும் பெருமை தேடித்தந்த நவ்ஜோத் கவுருக்கு வாழ்த்துக்கள்.   எதிர்காலத்தில் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்”  என தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.