மதுரை:
ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கி மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிடக்கோரி கடந்த ஆண்டு அவரது தாயார் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அது தள்ளுபடி செய்யப்ப்டட நிலையில், பின்னர் ரவிச்சந்திரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 26 ஆண்டு களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவிச்சந்திரனுக்கு, குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காக ஒரு மாதம் பரோல் விடுமுறை வழங்கக்கோரி மதுரை சிறை கண்காணிப்பாளருக்கு மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக உள்துறை செயலருக்கும் மனு அனுப்பப்பட்டது. இந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மனுமீதான இன்றைய விசாணையின்போது, ரவிச்சந்திரனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய பரோல் அளித்து உத்தரவிட்டது. சொத்து பிரிவினைக்காக அவருக்கு 2 வார காலம் பரோல் அளிப்பதாக கூறிய நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.