ஜெயேந்திரர் மறைவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். மேலும்,, ஜெயேந்திரருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
‘ஜெயேந்திரர் மறைவு குறித்து கேள்விப்பட்டதும் மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க அவர் பல நிறுவனங்களை ஏற்படுத்தினார்.
பலருக்கும் முன்மாதிரியான சேவைகள் மற்றும் உயர்ந்த சிந்தனைகளால் ஜெயேந்திரர் லட்சக்கணக்கான பக்தர்களின் இதயங்களிலும் மனங்களிலும் நீடித்து வாழ்வார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று மோடி பதிவிட்டுள்ளார்.