காஞ்சிபுரம்:

சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை அடுத்து  காமாட்சியம்மன் கோவில் நடை  சாத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்  சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது.  மேலும், வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.  கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

 

[youtube-feed feed=1]