மதுரை:

2020ம் ஆண்டிற்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும் என மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் கூறினார்.

2020ம் ஆண்டுக்குள் 13 செயற்கைகோள் ஏவ திட்டமிட்டுள்ளோம். செயற்கைகோள்களை தனியார் நிறுவனங்கள் தயாரிக்க அனுமதி வழங்கப்படும். சந்திராயன் விண்கலம் 6 மாதங்களில் அனுப்பப்படும். சர்வதேச நாடுகளும் செயற்கைகோள்களை அனுப்புவதால் வண்ணில் நெரிசல் ஏற்படுவது உண்மை. இதை தடுக்க புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

நம் நாட்டில் தயாரிக்கப்படும் செல்போன்களில் நேவிக் சேட்லைட் ரிசீவரை பொருத்தப்படும். இது செயல்பாட்டிற்கு வந்தால் செல்போன் வைத்திருப்பவர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும்’’ என்றார்.